உலகத்தொல்காப்பிய மன்றம்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, உலகத்தொல்காப்பிய மன்றம், கோவைத் தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் இணைந்து நிகழ்த்திய தொல்காப்பியர் சிலை திறப்பு விழா.

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை-641010.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, திருவள்ளுவராண்டு 2053, கி.பி. 13-4-2022, பங்குனித் திங்கள் 30ஆம் நாள் புதன்கிழமை முற்பகல் 10:30 மணி.
*-*-*-*-*
பேரூராதீனம் இருப்பத்து நான்காம் பட்டம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் திருவுளப்படி கயிலைப்புனிதர் பேரூராதீனம் இருப்பத்து ஐந்தாம் பட்டம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகள் அவர் எண்ணத்தில் தோன்றியதே இந்தத்தொல்காப்பியர் படிமம். அச்சிந்தனையின் செயல் வடிவாக உலகிலேயே முதன்முதலாக ஐம்பொன்னால் 270 கிலோ எடையில் தொல்காப்பியர் திருவுருவச் சிலையினை உலகத் தொல்காப்பிய மன்றம் (நியூசெர்சி), தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (கோவை), பேரூராதீனத் தமிழ்க் கல்லூரி ஆகிய மூன்றும் இணைந்து உருவாக்கி உலகிற்கு அளித்தது. இச்சிலை கோவை சிவன் நந்தி கலையகச் சிற்பி தங்கம் சேதுபதி அவர்களால் வார்த்து அமைக்கப்பட்டது. இச்சிறப்புறு சிலை தவப்பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் அவர்களின் 96 ஆம் அகவை நாண்மங்கல விழாவன்று (3-10-2021) நிலைப்பெறச் செய்யப்பட்டது. பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியில் 13-4-22 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் தொல்காப்பியர் சிலைத்திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மாணாக்கர்களின் சிறந்த முன்அணி வகுப்புடன் பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் முனைவர் சிற்பி பொ. பாலசுப்பிரமணியம், கல்லூரிச் செயலர் முனைவர் சி. சுப்பிரமணியம், தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் ஆகியோர் முன்னிலையில் தொல்காப்பியர் சிலையைப் பேராசிரியர் முனைவர் ப. மருதநாயம் அவர்கள் திறந்து வைத்தார். அன்று செந்தமிழ்ச் சாலினி, முத்தமிழ்சாமினி என்ற இரட்டைச் சிறுமிகள் தொல்காப்பியத்தின் 1610 நூற்பாக்களையும் மனனமாக ஒப்புவித்தலால் அவர்களது தமிழ் ஆற்றல் மேலும் வளர இயலுக்கு 1000 ரூபாய் வீதம் 27000 உரூபாய் நிதி உதவியை முனைவர் நாச்சி.க.நிதி அவர்களும், பாராட்டாக 15000 உரூபாய் புவனேஸ்வரத்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு செ. துரைசாமி அவர்களும் வழங்கினார்கள். முனைவர் நாச்சி க. நிதி (உலகத்தொல்காப்பிய மன்றம்), புலவர் ச.ந. இளங்குமரன் (தேனி வையைத் தமிழ்ச்சங்கம்) ஆகிய இருவரும் இணைந்து ஆக்கிய செந்தமிழ்ச் சாலினி, முத்தமிழ் சாமினி ஆகியோரின் தொல்காப்பிய நூற்பா முற்றோதல் குறுந்தகடு பேராசிரியர் முனைவர் ப. மருதநாயம் அவர்களால் வெளியிடப்பட்டது.

தொல்காப்பியர் திருவுருவச் சிலை திறப்பு நிகழ்ச்சி:
திருவிளக்கேற்றல்: மங்கையர் திலகங்கள்
தொல்காப்பியர் திருவுருவச் சிலை திறப்பு: பேராசிரியர் முனைவர் ப. மருதநாயம் அவர்கள்.



*-*-*-*-*
வரவேற்புரை: தொல்காப்பியத் தொண்டன் முனைவர் நாச்சி க. நிதி அவர்கள், செயலாளர், உலகத்தொல்காப்பிய மன்றம், நியூ செர்சி, அமெரிக்கா.



*-*-*-*-*
பாராட்டு அருளுரை: திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம், முனைவர் திருப்பெரும்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள்.



*-*-*-*-*
முன்னிலை: முனைவர் சி. சுப்பிரமணியன் அவர்கள், கல்லூரிச் செயலர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை.


தலைமையுரை: பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள், துணைத்தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.



*-*-*-*-*
திருவுருவச் சிலை திறப்பு, சிறப்புரை: பேராசிரியர் முனைவர் ப. மருதநாயம் அவர்கள், துணைத்தலைவர், ஆய்வுத்தகைஞர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.



*-*-*-*-*
திருப்பருப்பத யாத்திரை - நூல் வெளியீடு: பத்மசிறீ பேராசிரியர் முனைவர் சிற்பி பொ. பாலசுப்பிரமணியம் அவர்கள், மேனாள் தமிழியல் துறைத்தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
நூல் பெறுதல்: புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்கள், கோவை.
திருமிகு சி. ஆனந்தராசு அவர்கள், அறங்காவலர், சப்தமாதா சாமுண்டா தேவி திருக்கோயில் , கோவை.
திருமிகு செ. துரைசாமி அவர்கள், தலைவர், புவனேஸ்வரத் தமிழ்ச்சங்கம்.
புலவர் திருமிகு ச.ந. இளங்குமரன் அவர்கள், நிறுவனர், தேனி வையைத் தமிழ்ச்சங்கம்.



*-*-*-*-*
சிறப்புரை: பத்மசிறீ பேராசிரியர் முனைவர் சிற்பி பொ. பாலசுப்பிரமணியம் அவர்கள். மேனாள் தமிழியல் துறைத்தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.



*-*-*-*-*
தொல்காப்பிய நூற்பா முற்றோதல் பாராட்டு, சிறப்புப் பரிசு வழங்குதல்: பெறுபவர்கள் - தொல்காப்பியத் தூதர்கள் முத்தமிழ் சாமினி, செந்தமிழ் சாலினி ஆகியோர்.
தொல்காப்பிய நூற்பா முற்றோதல் குறுந்தகடு வெளியீடு, பரிசு வழங்குதல்:
குறுந்தகடு ஆக்கம் - புலவர் ச.ந. இளங்குமரன் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், முனைவர் நாச்சி க. நிதி உலகத்தொல்காப்பிய மன்றம்.
வெளியீடு - பேராசிரியர் முனைவர் ப. மருதநாயம் அவர்கள்.
பெறுநர் - பத்மசிறீ பேராசிரியர் முனைவர் சிற்பி பொ. பாலசுப்பிரமணியம் அவர்கள்.



*-*-*-*-*
நன்றியுரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன்அவர்கள், தலைவர், கோவைத் தொல்காப்பியர் தமிழ் சங்கமம்.



*-*-*-*-*
நிறைவுப்பண்: மாணாக்கர்கள், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி.
இணைப்புரை: இணை பேராசிரியர் முனைவர் க. திருநாவுக்கரசு, மாணாக்கர்கள்



காணொளி

நிகழ்வுகள்