உலகத் தொல்காப்பிய மன்றம்
மலேசியக் கிளை

மன்ற முகப்பு

வணக்கம்!

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் மலேசியக் கிளை தொடக்க விழா!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவின், செலாங்கூர் மாநிலத்தில் பந்திங், தெலுக் பங்ளிமா காராங் என்னும் ஊரில் 23.12.2017 மாலை 5 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் மலேசியக் கிளை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தமிழச்சி காமாட்சி, முனைவர் முரசு, நெடுமாறன், திரு. இராசசேரன், அறிஞர் இர. திருச்செல்வம், டத்தோ சேகரன், பொறியாளர் இரா. பெருமாள், ம. முனியாண்டி, சரசுவதி வேலு உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழச்சி காமாட்சி அவர்கள் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இர. திருச்செல்வம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, தொல்காப்பியச் செம்மல் என்னும் விருதளித்துப் பாராட்டினோம்.

உலகத் தொல்காப்பிய மன்றம் - மலேசியக் கிளை தொடக்க விழா பற்றி முனைவர் மு.இளங்கோவன் குறிப்பு.