கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

மன்ற முகப்பு

மன்ற நோக்கம்

வணக்கம்!,
தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினைத் தமிழ் மக்கள் அனைவரும் உணரும்வகையில் செயலாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலகத் தொல்காப்பிய மன்றம் தோற்றம்பெற்றுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பினையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினையும் சற்றொப்ப மூவாயிரம் ஆண்டுகளாக அரணிட்டுக் காத்துநிற்கும் தொல்காப்பியத்தைப் பரப்புவதற்கு முன்வருமாறு உலகத் தமிழர்களை அன்புடன் வேண்டுகின்றோம். இப்பொது நோக்குடன் செயல்படும் கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை), உலகத் தொல்காப்பிய மன்றத்துடன் தோழமை மன்றமாய் இணைந்து செயல்படுகிறது. தொல்காப்பியர் பேரவை என்ற சங்கம் 5-9-2017 ஆம் நாளன்று உருவாக்கப் பட்டு, பதிவு செய்யும் போது தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் எனப்பெயர் வைக்கப்பட்டது. இப்பேரவையின் தலையாய நோக்கங்கள்:

  • தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழர்பண்பாடு ஆகியவற்றின் வேர்களையும் விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்துதல்.
  • பண்டைய இலக்கண, இலக்கியங்களை இக்கால இளைஞர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் உணரச் செய்து அவற்றின் மீது நாட்டம் உண்டாக்கல்.
  • சாதி, சமயம், இனம், அரசியல் கலப்பில்லாமல் தமிழின் உயர்வு ஒன்றைமட்டமே எண்ணிச் செயல்படுதல்.
  • திருவள்ளுவர் நாள், தொல்காப்பியர் நாள், தாய்மொழி நாள் ஆகியவற்றைச் சிறப்பாகக் கொண்டாடுதல்.
  • திங்கள் தோறும் நடைபெறும் அமர்வுகளில் அத்திங்களில் வரும் சிறப்பு நாட்களையும், தமிழுக்குத்தொண்டாற்றிய சான்றோர்களின் பிறந்த, மறைந்த நாட்களையும் நினைவு கூறுதல்.
  • தொல்காப்பிய வகுப்புக்கள் மூலம் இலக்கியத்தின் வேராகிய இலக்கணங்களைக் கற்பித்தல்.
  • சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இலக்கண, இலக்கிய ஆய்வுரைகள் நிகழ்த்துதல்.
  • பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு இலக்கண இலக்கியங்களில் போட்டிகள் நிகழ்த்திப் பரிசுகள் வழங்குதல், தமிழுக்கத்தொண்டாற்றும் சான்றோர்களுக்கு விருதுகளும் பாராட்டுப்பத்திரங்களும் வழங்கல்.

நிர்வாகக்குழு
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்.