உலகத் தொல்காப்பிய மன்றம்
ஆத்திரேலியா-சிட்னி

மன்ற முகப்பு

வணக்கம்!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, மலேசியா,சப்பான் ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. ஆத்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 20.04.2019 அன்று உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராகப் பொறியாளர் மகேந்திரன் இரத்தினம் அவர்கள் செயல்பட்டு, நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் மாத்தளை சோமு, அன்பு செயா உள்ளிட்ட தமிழன்பர்கள் கலந்துகொண்டு, உரையாற்றினர். தமிழகத்திலிருந்து மு. இளங்கோவன் கலந்துகொண்டு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கத்தினையும் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.